காதலனுக்கு துரோகம்! மாமியாரின் 50 வயது கள்ளக்காதலனுடன் குடித்தனம் நடத்திவந்த 20 வயது பெண்! இறுதியில் நடந்த விபரீதம்!!
நெல்லை மாவட்டத்தில் வசித்து வந்தவர் ராஜபாண்டி. 50 வயது நிறைந்த இவருக்கு திருமணமாகி இரு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது ஏராளமான கார்கொள்ளை வழக்குகள் உள்ளது. இவர் கார்களை திருடிவிற்று வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவதாக அவருக்கு கார் திருடுவதற்கு துப்புக்கொடுக்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது வீட்டிற்கு ராஜபாண்டி அடிக்கடி சென்று வந்த நிலையில் அவருக்கு அந்த பெண்ணின் மகனின் காதலி சித்ரா என்ற 20 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மகன் காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்த அந்த பெண்ணை மாமியாரே பணத்திற்காக கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்தது சித்ரா, ராஜபாண்டி இருவரும் தூத்துக்குடியில் வீடு எடுத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள அக்கம்பக்கத்தினரிடையே நாங்கள் இருவரும் அப்பா மகள் எனவும், எனது மகளுக்கு தாய் இல்லை எனவும் கூறி நம்பவைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருட்டு கார் வாங்குவது தொடர்பாக ராமர் என்ற 22 வயது நபர் அவர்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் சித்ராவிற்கு ராமருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் ராஜபாண்டிக்கு தெரியவந்த நிலையில் அவர் குடிபோதையில் சித்ராவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் சித்ரா ராமரிடம் ராஜபாண்டி உயிரோடு இருந்தால் நாம் இருவரும் சேர முடியாது என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராமர் மற்றும் சித்ரா அவரது நண்பர் சக்திவேல் என்பவருடன் இணைந்து ராஜபாண்டியை அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அவரது தலையையும், உடலையும் வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்த நிலையில் போலீசார்கள் சித்ரா மற்றும் ராமர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.