தமிழகம்

காதலனுடன் ஓட முயன்ற காதலி! போலீஸ் விசாரணையில் வெளியான பதறவைக்கும் உண்மை! இறுதியில் நடந்தது என்ன?

Summary:

Young girl got to know about her boyfriend after police enquiry

சென்னையில் தொடர்ந்து நடந்துவரும் வாகன திருட்டு, ஜெயின் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க வாகன சோதனையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது,  2 இளைஞர்கள் மற்றும் ஒரு இளம் பெண் ஆகிய மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருவதை காவல்துறையினர். அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில், அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த வண்டியில் வந்த பெண்ணும், இளைஞரும் காதலிப்பது தெரியவந்தது. அந்த  இளம் பெண்ணின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் அவரை சென்னை பூந்தமல்லியில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டில் விட்டுச்சென்றுள்ளனர்.

தனது காதலனை பிரிய மனமில்லாத அந்த இளம் பெண் தொடர்ந்து காதலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். மேலும் தன்னை வந்து அழைத்துசெல்லும்படியும் அவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணை பாண்டிச்சேரி அழைத்துச்செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

அந்த இளைஞன் மீது சந்தேக மடைந்த போலீசார் மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் அந்த இளைஞன் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் செல்போன் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பது தெரியவந்தது.

காவல்துறையின் விசாரணையில், தன் காதலர் ஒரு திருடன் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் செய்வதறியாது திகைத்து தனது காதலை துண்டித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இரு இளைஞர்களையும் அழைத்து விசாரணை செய்தனர்.


Advertisement