உல்லாசமாக இருக்க போதை காளான் சாப்பிட்ட இளம்பெண் மரணம்.. காதலன் கைது!

உல்லாசமாக இருக்க போதை காளான் சாப்பிட்ட இளம்பெண் மரணம்.. காதலன் கைது!


Young girl death ate magic mushrooms

நீலகிரி அருகே போதை காளான் சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆகாஷின் காதலியான 20 வயதான இளம் பெண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார்.

Magic mushrooms

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஆகாஷ் வீட்டில் யாரும் இல்லாததால் காதலியை அழைத்து வந்துள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் இவர்கள் இருவருக்கும் போதை இல்லாததால் ஆன்லைனில் போதை காலாணை தேடியுள்ளனர்.

அப்போது மேஜிக் என்ற காளான் அதிக போதையுடன் பாலுணர்வை தூண்டும் என்பதை அறிந்தனர். அதன்படி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று போதை காளானை பறித்து வந்து சமைத்து மதுவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளனர்.

Magic mushrooms

அதன் பின்னர் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில், மயக்கமடைந்த இளம் பெண் தூக்கத்திலோ அல்லது மயக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் முதலில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆகாஷின் மீது கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.