யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
வேலைக்கு சேர்ந்த முதல்நாளே இளம்பெண் செய்த காரியம்.! ஐடி நிறுவனத்தில் பரபரப்பு!!
வேலைக்கு சேர்ந்த முதல்நாளே இளம்பெண் செய்த காரியம்.! ஐடி நிறுவனத்தில் பரபரப்பு!!

திருச்சியை சேர்ந்தவர் ஜெனிடா ஜூலியஸ். 24 வயது நிறைந்த இவர் தியாகராயநகரில் வசித்து வந்தார். மேலும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான இவர் அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல்நாள் வேலைக்கு சென்ற அவர் அன்று மாலையே நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து வெளியேறும் அவசரகால வெளியேறும் வழியின் மூலமாக வெளியே குதித்துள்ளார். அப்பொழுது முதல் மாடியில் உள்ள இரும்பு கம்பி அவரது தலையில் மோதி, இரத்தவெள்ளத்தில் தரையில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது ஜெனிடா யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். மேலும் அவர் கொண்டு வந்த மதிய உணவையும் சாப்பிடாமல் மனா அழுத்தத்துடன் இருந்துள்ளார் என சிலர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் இது தற்கொலைதானா அல்லது கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.