தமிழகம்

வெளியே சென்று வீடு திரும்பிய கணவன்..! திருமணம் முடிந்த 12 நாட்களில் புதுப்பெண் செய்த காரியம்.! உறைந்துபோய் நின்ற கணவன்.!

Summary:

Young girl commit suicide in chennai

முன்னாள் காதலன் மிரட்டியதால், திருமணம் முடிந்த 12 நாட்களில் இளம் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த சென்னீர்குப்பம் என்னும் பகுதியில் வசித்து வரும் முத்து என்பவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலை விஷயமாக முத்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சாஸ்வதி தூக்கு மாட்டி சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்னர். இதனை அடுத்து நடந்த விசாரணையில், திருமணத்திற்கு முன்பு சரஸ்வதி வேறு ஒருவரை காதலித்து வந்ததும், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடப்போவதாக அந்த இளைஞர் மிரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.

தனது முன்னாள் காதலனின் மிரட்டலுக்கு பயந்து சரஸ்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement