ப்ளீஸ் டா..! கெஞ்சிய காதலி..! மறுத்த காதலன்..! இளம் பெண்ணின் முடிவால் வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சிYoung girl commit suicide after boy friend refused to marry her

காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், ஏர்வாடி கோவில் வாசல் தெருவை சேர்ந்த சங்கர். கட்டிட தொழிலையான இவருக்கு ஐஸ்வர்யா என்ற 18 வயது மகள் உள்ளார். ஐஸ்வர்யா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் வேலை பார்த்துவரும் ஐயப்பனும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனது பெற்றோர்கள் எப்படியும் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள், அதனால் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என ஐஸ்வர்யா ஐயப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால் ஐயப்பன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை எப்படியாவது திருமணம் செய்துகொள் என ஐஸ்வர்யா ஐயப்பனிடம் பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனாலும் ஐயப்பன் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் மனமுடைந்துபோன ஐஸ்வர்யா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதுள்ளன்னர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொளவதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும்  போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் ஐயப்பன்தான் என ஐஸ்வர்யா எழுதி வைத்திருந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் ஐயப்பனை கைதுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காதலி பலமுறை கெஞ்சியும் காதலன் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.