விடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள்.! யாரையும் விடக்கூடாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

விடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள்.! யாரையும் விடக்கூடாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!


young-girl-abused-in-viruthunagar

விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் வசித்துவரும் வரும் 22 வயது இளம் பெண்ணிற்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்ததை வீடியோ பதிவு செய்துள்ளார். பின்பு திருமணம் செய்துகொள்ள அந்த பெண் ஹரிஹரனை வற்புறுத்தினார்.ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இந்தநிலையில் அந்த இளம் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து ஹரிஹரன் பதிவுசெய்த வீடியோ காட்சிகளை காட்டி மிரட்டி அந்த இளம்பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவினை அவரது நண்பர்களுக்கு பகிர்ந்து ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அந்த பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

கயவர்களின் கொடுமை தாங்காத அப்பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின அடிப்படையில் ஹரிஹரன் உட்பட 8 பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 4 பேரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் சிறார்கள் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு, நேர்முகமாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பிரிவு தாக்கல் செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.