தமிழகம்

11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ம

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது.   

இந்தநிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டிங் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது விடுமுறை என்பதால் அந்த சிறுமி ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியில் பெயிண்டிங் வேலை செய்துவரும் கார்த்தி(21) என்பவரும், அந்த சிறுமியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமி வேலை பார்க்கும் கடைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியையும், கார்த்தியையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது, கார்த்தி சிறுமியை கடத்தி சென்று ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்தி மீது வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.


Advertisement