தமிழகம்

திருமணத்திற்கு சென்ற இளம்தம்பதியினருக்கு இப்படியொரு துயரமா? துடிதுடித்துப் போன உறவினர்கள்!!

Summary:

Young couple dead in accident in chennnai

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்மாறன்.இவர் கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்கள் உறவினர்கள் 7 பேருடன் சென்னை மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சமீபத்தில் காரில் சென்று கொண்டு இருந்துள்ளனர். 

 அப்பொழுது கார் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது,  கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் வேகமாக  மோதியது. இதில் கார் அடையாளம் தெரியாத அளவிற்கு நொறுங்கியது.  

 இந்நிலையில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறி துடித்துள்ளனர்.அப்பொழுது அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து, காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அங்கு அனைவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தமிழ்மாறன் மற்றும் சுவேதா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement