தமிழகம்

கடலைப்பருப்பை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை! தொண்டையில் சிக்கி பரிதாப மரணம்! பெற்றோர்களே உஷார்.!

Summary:

young child died

தமிழகத்தில் ஒன்றரை வயது குழந்தை கடலைப் பருப்பை திண்ற போது, தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளியான இவருக்கு தர்ஷனா என்று 18 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை விஜய்யின் மகள் தர்ஷனா அவர்களது வீட்டில் இருந்த கடலைப்பருப்பை எடுத்து சாப்பிட்டுள்ளார். 

அவர் கடலைப்பருப்பை எடுத்துச்சாப்பிடும் பொழுது சிறுமியின் பெற்றோர்களும் அருகில் இருந்துள்ளனர். மகள் கடலைப்பருப்புதானே சாப்பிடுகிறாள் என சாதாரணமாக இருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்தவிதமாக கடலைப் பருப்பு தர்ஷனாவின் தொண்டையில் சிக்கிக்கொண்டு சிரமப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்துள்ளார் சிறுமி தர்ஷனா.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தர்ஷனாவின் பெற்றோர் சிறுமியை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்து வந்த தர்ஷனா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதுபோன்ற உணவுகளை கொடுக்கவேண்டும் என பெற்றோர்கள் அறிந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கலாம் என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.


Advertisement