தமிழகம்

பட்டப்பகலில் இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து , காதலிக்க வற்புறுத்திய இளைஞன்!

Summary:

young boy forced love

சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரும், பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஒருவருடத்திற்கு முன்பு அந்த பெண்ணிற்கு சிவக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் சிவகுமாருடன் பேசுவதை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அந்த பெண்ணை தனியாக சந்தித்த சிவகுமார், ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணிடம் திடீரென கத்தியை காட்டி, காதலிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என சிவகுமார் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இளைஞரை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சிவகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement