தமிழகம்

திருமண ஆசையில் இருக்கும் பெண்களை குறி வைத்த இளைஞன்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

young boy cheated lot of girls

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. பொறியியல் பட்டதாரியான இவர் கொடுங்கையூரில் வசிக்கும் இளம் பெண்ணிடம், திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். 

மேலும், அப்பெண்ணிடம் இருந்து ஐந்து லட்சத்திற்கும் மேல் பணம் மற்றும் 20 சவரன் நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ராகேஷ் சர்மாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த இளம்பெண், இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகேஷ் சர்மா குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் ராகேஷ் சர்மா மீண்டும் இந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தனக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் இது குறித்து அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாரின் அறிவுறுத்தல் படி மாதாவரம் ரவுண்டான அருகே வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு ராகேஷ் சர்மாவிடம் கூறியுள்ளார்.

அதன் படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு அந்த பெண்ணுடன் சென்ற போலீசார் மறைந்து நின்றுள்ளனர். அப்போது ராகேஷ் சர்மா பணம் வாங்க வந்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். ராகேஷ் சர்மாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராகேஷ் சர்மாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி வலை வீசி உள்ளார். அதில் சிக்கிய பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது போல் சென்னை உட்பட பல பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.


Advertisement