முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து 10 சவரன் கொள்ளையடித்த வாலிபர்.. போலீசார் தீவிர விசாரணை.!

முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து 10 சவரன் கொள்ளையடித்த வாலிபர்.. போலீசார் தீவிர விசாரணை.!


Young boy cheat to old man in Chennai

சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர் முதியவர் அன்பழகன். இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக புதுச்சேரி சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அன்பழகன் பக்கத்தில் இளைஞர் ஒருவர் அமர்ந்துள்ளார்.

chennai

பேருந்தில் மூன்று நேர பயணம் என்பதால் அன்பழகன் வாலிபருடன் நன்றாக பேசி வந்துள்ளார். அந்த பேருந்து உணவு இடைவேளைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்தப்பட்டது. அப்போது இளைஞர் முதியோருக்கு மயக்க மருந்து கலந்த டீ மற்றும் பிஸ்கட்டை வாங்கி கொடுத்துள்ளார்.

இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் முதியவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனிடையே அந்த இளைஞர் முதியவரிடமிருந்து 10 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

chennai

இதனையடுத்து பேருந்து மத்திய கைலாஷ் அருகே வரும்போது கிண்டியில் இறங்க வேண்டிய அன்பழகனை நடத்தினர் எழுப்பி விட்டுள்ளார். அப்போது அன்பழகன் கண்விழித்து பார்த்த போது அருகில் இருந்த வாலிபர் மாயமாக இருந்தது தெரியவந்தது. மேலும் தன்னிடமிருந்து நகைகள் கொள்ளடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகார் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.