தமிழகம்

90 வயது பாட்டினு தெரிந்தும்.. கருமம் கருமம்.. இளைஞர் செய்த காரியம்..! பொள்ளாச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்

Summary:

பொள்ளாச்சி அருகே 90 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மைதீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

பொள்ளாச்சி அருகே 90 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மைதீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில் அதன் உச்சமாக 90 வயது மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி  அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 90 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மூதாட்டி தனியாக இருப்பதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த மைதீன் என்ற வாலிபர் அந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி சத்தம் போட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தபோது மைதீன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனை அடுத்து அந்த மூதாட்டியின் மகன் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி கண்டுபிடித்து அவர் மீது மீது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement