தமிழகம்

மக்களே மகிழ்ச்சியான செய்தி! நாளை உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் அதிரடி சலுகை!!

Summary:

world milk day - tomorrow - aavin pulk offer 5%

இந்தியா மற்றும் உலக நாடுகள் சார்பாக ஒவ்வொரு நாளும் ஒரு தினம் அனுசரித்து கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பால் என்பது மனித வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருளாகும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாளை உலக பால் தினம் என்பதால் ஆவின் நிறுவனம் அதிரடி சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம் ஆகும். 

2001ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதியன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை உலக பால் தினம் கடைபிடிக்கப்படுவதை அடுத்து ஆவின் நிறுவனம் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 1ம் தேதி ஆவின் பால் பொருட்களுக்கு பாலகங்களில் 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement