வைரலாகும் வீடியோ..! ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒதுக்கி வைக்கப்படும் பெண்கள்..! இந்தகாலத்துலயும் இப்படியா.?

வைரலாகும் வீடியோ..! ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒதுக்கி வைக்கப்படும் பெண்கள்..! இந்தகாலத்துலயும் இப்படியா.?



women stay on separate place on her periods days

பொதுவாக மாதவிடாய் குறித்த கருத்து ஒவ்வருவரிடத்தும் மாறுபட்டு கொணடே இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் மாதவிடாய் என்பது சகஜமான விஷயமாக மாறிப்போனாலும், தற்போதும் கூட மாதவிடாய் தீட்டு என்றும், வீட்டுக்குள் வரக்கூடாது, சமையலறைக்கு வர கூடாது என்று பல்வேறு நடைமுறைகள் இருக்க தான் செய்கிறது. 

இன்னும் உச்சத்திற்கு சென்று மாதவிடாய் நேரத்தில் தனி தட்டு, தனி படுக்கை  என்று ஒதுக்கி விடுவார்கள்.  இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது அதில் ஒரு பெண் அவர்களது கிராமத்தில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் தனியே ஒரு அறையில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அந்த தனி அறையில் தான் மாதவிடாய் காலத்தில் அந்த கிராம பெண் அனைவரும் இருக்க வேண்டுமாம். மாதவிடாய் முடியும் வரை அதே அறையில் தான் இருக்க விடும். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்களை அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ தான் கொண்டு கொடுப்பார்களாம்.

அப்படி கொடுக்கப்படும் அந்த உணவை கூட தனி தட்டில் வைத்து ரோட்டில் உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும். இந்த வீடியோவில் அந்த பெண் இந்த நடைமுறைகளை பெருமையாகவும், பாருங்கள் எங்கள் ஊரில் நடக்கும் சம்பிரதாயம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த மக்கள், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.