வீட்டின் மொட்டை மாடியில் சாப்பிட்டுவிட்டு கைகழுவிய பெண் மின்சாரம் தாக்கி பரிதாப பலி; மக்களே கவனமாக இருங்கள்.!

வீட்டின் மொட்டை மாடியில் சாப்பிட்டுவிட்டு கைகழுவிய பெண் மின்சாரம் தாக்கி பரிதாப பலி; மக்களே கவனமாக இருங்கள்.!Women dead by current shocking after eating food

வீட்டின் மாடியில் இருந்து வேலை பார்ப்போர், தங்களது கட்டிடத்திற்கு அருகே மின்சார கம்பிகள் செல்லுகின்றனவா? என்பதை சோதித்து, அவ்வாறு மின்சார கம்பி சென்றால் அதனால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கோழியூர் பகுதியை சேர்ந்தவர் மலர்க்கொடி (வயது 52). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று திட்டக்குடி பொன்னுசாமி நகரில் உள்ள வீட்டில் வேலைபார்த்துள்ளார். 

மதிய உணவு இடைவேளையின் போது உணவு சாப்பிட்ட மலர்க்கொடி, வீட்டின் மேல்தளத்தில் இருந்தவாறு கைகளை கழுவியுள்ளார். அப்போது, அவரது கைக்கு அருகே மின்சார கம்பிகளும் சென்றுள்ளது. 

thittagudi

இந்த சம்பவத்தில் பசிக்கு உணவருந்திவிட்டு கைகளை கழுவிய மலர்க்கொடி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், மலர்கொடியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மின்சாரம் தாக்கியத்தில் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக திட்டக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.