தாலி!! குங்குமம்!! ஆசையோடு வாழ்க்கையை தொடங்கிய புதுப்பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்..
தாலி!! குங்குமம்!! ஆசையோடு வாழ்க்கையை தொடங்கிய புதுப்பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்..

திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மரிய அந்தோணி ராஜ் (35). இருசக்கரங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்திவரும் இவருக்கும், சென்னையை சேர்ந்த தர்மராஜ்- இன்னாசி அம்மாள் இவர்களின் மகள் வின்சென்ட் மேரி (30) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் குருவிநத்தம் கிராமத்தில் வாழ்ந்துவந்த வின்சென்ட் மேரி, சம்பவத்தன்று தனது கணவருடன் வயலுக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தனது மனைவி வின்சென்ட் மேரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்களுக்கும், வின்சென்ட் மேரியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வின்சென்ட் மேரியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இறந்து போன தங்கள் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுத பெண்ணின் தாயார், தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக வின்சென்ட் மேரி தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
பல்வேறு ஆசைகளுடனும், கனவுகளுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இளம் பெண், மூன்று மாதத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.