காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண், செல்போன் பதிவில் அம்பலமான ரகசியம், ஆட்டம் கண்ட போலீசார்.!

காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண், செல்போன் பதிவில் அம்பலமான ரகசியம், ஆட்டம் கண்ட போலீசார்.!


women attempt suicide for police blakmailing

லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒருதலைபட்சமாக விசாரணை செய்த போலீஸார் விபச்சார வழக்கில் கைது செய்து விடுவோம் என்று மிரட்டியதால் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னையை சேர்ந்த திருவேற்காடு அருகே உள்ள கோலடி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன்.இவரது மனைவி ரேணுகா. இவர் உடல்நலம் பாதிப்படைந்த முதியோர்களுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் அளிக்கும்  நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ரேணுகா தனது வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றை கட்டி வந்தார்.அந்த கழிப்பறையின் மேற்பகுதி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அமிர்தவள்ளி என்பவரின் வீட்டிற்கு இடையூறாக இருந்ததாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    Women

மேலும் இது குறித்து அமிர்தவல்லி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் போலீசார் இரு குடும்பத்தாரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்பொழுது ரேணுகா திடீரென காவல்நிலையத்திலேயே பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதைப் பார்த்த போலீஸார் தீயை அணைத்து ரேணுகாவி மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ரேணுகா தனது தந்தையுடன் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது .

அதில் ஆய்வாளர் அலெக்சாண்டர் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னாள் சேர்மன் மகேந்திரன் மற்றும் கவுன்சிலர் ஆகியோரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தன் மீது விபசார வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர் என பேசியது பதிவாகி இருந்தது.

மேலும் இதனாலேயே  ரேணுகா காவல் நிலையத்தில் தீக்குளித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது .

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.