தமிழ் நாட்டில் பனியின் தாக்கம் குறையுமா..?.... வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்...!



Will the impact of snow decrease in Tamil Nadu....Meteorological Center Chief Balachandran's explanation...

பனியின் தாக்கம் எப்போது குறையும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்களில் தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, 

குளிர்கால மாதங்கள்‌என்று ஜனவரி, பிப்ரவரி மாதங்களை சொல்லுவோம். பிப்ரவரியில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வெப்பம் காரணமாக பகல் நேரத்தில் நீர் நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே நகர்கிறது. 

மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்று இல்லாத காரணத்தினால், இரவு நேரத்தில் அந்த நீர்த்துளிகள் காற்றிலுள்ள தூசுக்களில் படிந்து இது போன்ற சூழலை நமக்கு தருகிறது. இது ஒருசில பகுதிகளில் நிகழக்கூடிய ஒன்றாகும்.

தற்போது அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அடுத்த நான்கு, ஐந்து தினங்களில் இந்த பனியின் தாக்கம் குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.