பூட்டிய வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை! விசாரணையில் அம்பலமான மனைவியின் பலே நாடகம்

பூட்டிய வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை! விசாரணையில் அம்பலமான மனைவியின் பலே நாடகம்



wife-stole-jewellery-in-own-house

தூத்துக்குடி தாளமுத்து பகுதியை சேர்ந்தவர் வின்செண்ட். இவர் துறைமுக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி ஜான்சி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது வீட்டிற்குள் புகுந்து திருடர்கள் பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக வின்சன்ட் சமீபத்தில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

 அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது வின்சென்ட் 93 சவரன் நகைகளை வங்கியில் லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக பெண் ஒருவர் போன் செய்து, வங்கியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால், நகையை எடுத்து சென்றுவிடுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து அவரும் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார். பின்னரே இந்த கொள்ளை சம்பவம் நடந்தது என்பது தெரியவந்துள்ளது.

tamilnadu

அதனைத்தொடர்ந்து வங்கியில் விசாரித்ததில் வங்கியில் இருந்து யாரும் போன் செய்யவில்லை எனக் கூறியுள்ளனர். மேலும் அவரது வீடு இருக்கும் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஜான்சியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். 

பின்னர் தான் ஏலச்சீட்டுக்காக பலரிடமும் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்ததால், கசாயம் எனக்கூறி மயக்க மருந்தை கலந்து கணவருக்கு கொடுத்துவிட்டு இரவில் நகைகளை திருடி,  மண்ணில் புதைத்து வைத்துவிட்டு பின்னர் ஒன்றும் தெரியாதுபோல நாடகமாடியதாக கூறியுள்ளார். மேலும் அவரே வேறொரு எண்ணிலிருந்து கணவருக்கு போன் செய்து நகைகளை லாக்கரில் இருந்து எடுத்துவர வைத்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.