இது தேவையா..!! திருமணமான 22-வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட மனைவி.! பிளான் சொதப்பி உயிரை விட்ட மனைவி.!



Wife plan to kill her husband

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் கவுதம். 24 வயது நிரம்பிய இவர் கேபிள் டி.வி.யில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் கவுதமிற்கும், அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் தற்கொலை செய்ததால், அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  புவனேஸ்வரிக்கு, தொடக்கத்தில் இருந்தே கவுதமை பிடிக்கவில்லை.

 புவனேஸ்வரி திருமணத்துக்கு முன்பு போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்தார். மேலும் வேலை பார்ப்பவரையே திருமணம் செய்து கொண்டு, தானும் வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதனால் அவருக்கு மண வாழ்க்கை ஏமாற்றமாக இருந்தது. எனவே அவர் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டார். புவனேஸ்வரி போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது,  நிரஞ்சன் என்பவருடன் அவர் நட்பாக பழகி இருந்தார்.

இந்தநிலையில் புவனேஸ்வரி தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, நான் எனது கணவரை வெளியில் அழைத்து வருவதாகவும், அங்கு அவரை காரை ஏற்றி கொன்று விடுமாறும் கூறினார். இந்த திட்டத்தின்படி திருமணமான 22-வது நாளில், அதாவது கடந்த 2-ந்தேதி புவனேஸ்வரி கணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்தார்.

அவர்கள் வெளியே சென்றபோது அவர்களது இருச்சக்கர வாகனம் பழுதாகிவிட்டது. இதனால் கவுதம் அவரது இருச்சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு நடந்து வந்தார். அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதம் மீது மோதியது. இதில் காயமில்லாமல் அவர் உயிர் தப்பினார். அப்போது காரில் இருந்து இறங்கிய 5 பேர் கவுதமை கீழே தள்ளி சரமாரியாக தாக்கிவிட்டு அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர்.

கவுதம் மர்ம நபர்கள் வந்து சென்ற காரின் பதிவெண்ணை அடிப்படையாக வைத்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய கார் மற்றும் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் புவனேஸ்வரி, தனது கணவரை கொலை செய்ய திட்டம் போட்டது போலீசாருக்கு தெரிந்து விடும் என்ற பயத்தில் புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் புவனேஸ்வரிக்கு உதவி செய்த நிரஞ்சன் உட்பட அவரது நண்பர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.