தமிழகம்

5 வயது மகனால் ஏற்பட்ட தகராறு! ஆத்திரத்தில் துடிதுடிக்க மனைவி செய்த கொடூரம்!

Summary:

Wife killed husband in ranipettai

ராணிப்பேட்டை அருகே சிப்காட் பெல் ஊரகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர்  அகிலேஷ்குமார் சர்மா. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர் பெல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி ஆஷாகுமாரி. இவர்களுக்கு அயோக்குமார் என்ற 5 வயது மகன் உள்ளான். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  அகிலேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் அவர்களது மகன் அயோக்குமார் ஒழுங்காக சாப்பிடுவதில்லை என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றியநிலையில், ஆத்திரமடைந்த ஆஷாகுமாரி காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை எடுத்து கணவரை  குத்தியுள்ளார்.

இந்நிலையில் இரத்தவெள்ளத்தில் துடிதுடித்த அகிலேஷ்குமாரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆஷாகுமாரியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement