நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்.. கத்தரியால் குத்தி, கணவனை பாடையில் ஏற்றிய பாசக்கார மனைவி.!wife-killed-her-husband-for-his-suspicion

மனைவியின் மீது சந்தேகித்து அடிக்கடி கணவர் தகராறு செய்து வந்ததால், அவரை கத்திரிக்கோலால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியில் வசித்து வருபவர் வினோத்குமார். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்கிறார். இவரின் மனைவி மகாலட்சுமி வீட்டிலேயே தையல் மிஷின் வைத்து துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். தம்பதியர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் மனைவியின் மீது சந்தேகமடைந்த வினோத் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், இன்று அதிகாலை வினோத்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Coimbatore

இருப்பினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வினோத் குமாரின் மனைவியை விசாரித்தபோது, தங்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், அவர் ஆத்திரமடைந்து தனக்குத்தானே கத்திரிக்கோலால் குத்திக் கொண்டார் என தெரிவித்தார்.

இருப்பினும் அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் வினோத் இறந்து கிடந்த இடத்திலுள்ள தடயங்கள் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மகாலட்சுமி அவரது கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மகாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.