தமிழகம்

திருமணத்திற்கு முன்பு காதல்: கட்டிய கணவரை கொலை செய்து கிணற்றில் வீசிய இளம்பெண்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Summary:

திருமணத்திற்கு முன்பு காதல்: கட்டிய கணவரை கொலை செய்து கிணற்றில் வீசிய இளம்பெண்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள போரம் கிராமத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவருக்கும், கறம்பக்குடி அருகே உள்ள மாங்கான்கொல்லைபட்டியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணிற்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் தனது கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து கணவனின் சடலத்தை கிணற்றில் வீசிய நந்தினியை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், நந்தினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் நந்தினி வேலை பார்த்தபோது வாராப்பூர் ஊராட்சியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இந்தநிலையில் தான் பாண்டித்துரைக்கும், நந்தினிக்கும் திருமணம்நடைபெற்றுள்ளது.

திருமணம் நடந்த நாள் முதலே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த நந்தினி தனது கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க வீட்டின் அருகே இருந்த கிணற்றில் பாண்டித்துரையின் சடலத்தை வீசியது தெரியவந்தது. இதையடுத்து, நந்தினி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். 


Advertisement