தமிழகம்

வியாபாரத்திற்காக காய்கறிகளை எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குள் சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! சென்னையில் அரங்கேறிய சோக சம்பவம்

Summary:

wife hanged and suicide at chennai after fight

சென்னை புழலில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனம் வேதனையடைந்த மனைவி தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் செல்வராஜ், காய்கறி வியாபாரம் செய்பவர். இவருக்கும் சரண்யா என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

சரண்யா தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். தற்போது ஊரடங்கு இருப்பதால் செல்வராஜிற்கு வியாபாரம் குறைந்து சரியான வருமானம் இல்லை. வீட்டில் பணம் இல்லாததால் நேற்று இரவு இருவருக்கும் தகராறு நடந்துள்ளது.

lockdown crime: pregnant woman committed suicide near chennai

இதனால் கர்ப்பிணியான சரண்யா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். காலை எழுந்ததும் வீட்டிற்கு வெளியே செல்வராஜ் தள்ளுவண்டியில் காய்கறிகளை எடுத்துவைத்துள்ளார். அந்த சமயத்தில் சரண்யா மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொக்கியுள்ளார்.

காய்கறிகளை எடுத்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்ற செல்வராஜ், சரண்யா தூக்கில் தொங்குவதை பார்த்ததும் அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சரண்யாவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement