திருமணமான சில நாட்களில் கணவன் மீது எழுந்த சந்தேகம்! அவரது செல்போனை பார்த்த புதுபெண்ணுக்கு பேரதிர்ச்சி!

wife found husband bad character


wife-found-husband-bad-character

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவில் வசித்து வந்தவர் எட்வின் ஜெயக்குமார் இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கள்ளபெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணுடன் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இருவரும் மணப்பாறையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே ஜெயக்குமாரின் நடவடிக்கையின் மீது தாட்சருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் எட்வின் ஜெயக்குமார் எப்பொழுதும் செல்போனிலேயே மூழ்கியிருந்தார். இந்நிலையில் சந்தேகமடைந்த தாட்சர், கணவரின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் அவர் பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. அவற்றில் பல ஆபாசமாகவும் இருந்துள்ளது.

marriage

இந்நிலையில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்களை எட்வின் ஜெயக்குமார் ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளார் என்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்த தாட்சர் இதுகுறித்து அவருடன் கேட்டுள்ளார். இந்நிலையில் அவர் தாட்சருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் உனது ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தாட்சர் தனது சகோதரருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த நிலையில் இருவரும் எட்வின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் எட்வின் குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய்,  சகோதரி, உறவு பெண் ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.