தமிழகம்

போதையின் உச்சம்.! மனைவி இறந்தது தெரியாமல் கணவர் செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்த தனசேகரன் என்பவர் மாலதி என்பவரை காதலித்து திருமணம் செ

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்த தனசேகரன் என்பவர் மாலதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆசித் என்ற ஒரு மகன் உள்ளான். தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

இந்தநிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியில் உள்ள தாய் வீட்டில் மகனுடன் மாலதி வசித்து வந்தார். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தனசேகரன், அவ்வப்போது வந்து மனைவி, பிள்ளையை பார்த்து செல்வது வழக்கம். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் தனசேகரன் வந்தபோது, கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது நள்ளிரவில் எழுந்த மாலதி, வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது அம்மா தூக்கில் தொங்கியதை பார்த்த மகன் தந்தையை எழுப்பியுள்ளான். ஆனால் தனசேகரன் எழுந்து மின் விசிறியில் தொங்கிய மனைவியை கீழே இறக்கி வைத்து விட்டு மீண்டும் போதையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, மாலதி சடலமாக கிடந்துள்ளார், பக்கத்திலேயே தனசேகரன் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாலதி உயிரிழந்து கிடந்த அறையில் உள்ள மின்விசிறியில் மாலதியின் துப்பாட்டா மாட்டியிருந்ததை பார்த்தனர்.

இதனால், மாலதி தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலும், அவரது உடல் தரையில் கிடந்தது எப்படி என சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, போதையில் இருந்த தனசேகரனை எழுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்தது கூட தெரியாமல் அவரது உடல் அருகிலேயே கணவர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement