தமிழகம் காதல் – உறவுகள்

விபத்தில் உயிரிழந்த கணவன்! சில நாட்களிலேயே மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு! குழந்தைகளின் நிலைமை என்ன??

Summary:

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நிதா இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 6 வயதில் ஒரு மகள் உள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அம்பத்தூரில் வேலையை முடித்துவிட்டு மதுரவாயல் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்த மனோஜ் குமார் மீது பின்னால் வந்த கார் மோதியது. அதில் தூக்கிவீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் மனோஜ்குமாரின் குடும்பம் மீளாத் துயரில் மூழ்கியது. இந்த நிலையில் கணவன் இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிதா குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் நிதா ரத்தவாந்தி எடுத்த நிலையில் அதனைக் கண்டு பயந்துபோன அவரது மகன் உடனே அவரது பெரியப்பாவிற்கு போன் செய்துள்ளார்.

அங்கு விரைந்து சென்ற அவர் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் இறந்ததால் மனைவி எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement