BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கணவருக்கு 500 பெண்களுடன் தொடர்பு.. நீதிமன்றத்தில் உண்மையை புட்டுவைத்த மனைவி!
தஞ்சாவூர் அருகே தனது கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட சேர்ந்த ஆர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் எனக்கும், எனது கணவர் விவேக் ராஜ்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் எனது கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்தபோது அதில் பல பெண்களின் ஆபாச வீடியோ கால்களின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த பெண்ணின் கணவர் வங்கியில் வேலை செய்வதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பேசி சுமார் 500 முதல் 1000 வரை ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். இது குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மேலும் அந்தப் பெண் இரண்டு மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அடித்து துன்புறுத்தியதால், கரு கலைந்துள்ளது. இது குறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே தஞ்சை மகளிர் போலீசார் என் கணவர் மீது அளித்த புகாரை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.