யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்?.. தகுதியானவர்கள் குறித்து அமைச்சர்களின் அதிரடி தகவல் இதோ.!

யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்?.. தகுதியானவர்கள் குறித்து அமைச்சர்களின் அதிரடி தகவல் இதோ.!


Who can get 1000 money in Tamil Nadu

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போது திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் சட்டப்பேரவையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதன் பெயரில் தமிழகத்தில் தகுதியுள்ள குடும்ப அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ. 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 2.10 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கும் நிலையில், அதில் பாதி நபர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 

tamilnadu political

"குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூபாய் 1000 திட்டம் ஏழை மக்களுக்கு நிச்சயம் சென்றடையும். குடிசை மாற்று வாரியத்தில் பயனடைந்த மக்களுக்கு இந்த திட்டம் முழுமையாக கிடைக்கும்" என்று தெரிவித்தார். 

அதேபோல, அமைச்சர் கீதா ஜீவன் இது குறித்து கூறுகையில், "இந்த திட்டம் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு பொருந்தாது. வசதி படைத்தோர் நிவாரண திட்டத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதால், அவர்களை கழித்து விட்டாலே திட்டம் அனைவருக்கும் சென்று சேரும்" என்று தெரிவித்தார்.