விவேக் மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்... வைரல் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!Vivek named road photo viral

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் விவேக்கின் மனைவி சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 
விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.

அம்மனுவை ஏற்று கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

vivek

மேலும் மே 3 ஆம் தேதி விவேக் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.