BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அமேசான் ஆர்டரில் 'கருங்கல்'.! என்ன ஆர்டர் செய்தால் என்ன வருகிறது.? வேதனையில் பெண்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த ரமா என்ற பெண் அமேசான் விற்பனை இணையதளத்தில் ரூ.400 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு பிளாஸ்க் ஆர்டர் செய்து இருக்கிறார். அதன் பின் ஓரிரு நாட்களில் அவருக்கு அவரது ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது.
அப்போது, அவர் ஆசையாக பிரித்துப் பார்த்த நிலையில், அங்கே பிளாஸ்க்கிற்கு பதிலாக ஒரு கருங்கல் இருந்தது. இதை பார்த்த ரமா மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி அவர் அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து ரமா பேசிய வீடியோ ஒன்று தற்போது தீயாக பரவி வருகிறது. அதில் அவர், "கடைகளுக்கு செல்ல சங்கடப்பட்டு கொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்கிறோம். நிறைய பேருக்கு நல்ல முறையில் ஆர்டர் கிடைத்து நல்ல பொருளாக அமைந்து விடுகிறது. என்னை போன்ற ஏமாளிகளுக்கு இப்படி கல்லை வைத்து அனுப்புகிறார்கள்." என்று வெகுளியாக சிரித்த முகத்துடன் கூறுகிறார்.
இதையும் படிங்க: பள்ளி முதல்வரை, எட்டி பார்த்த மாணவர்கள்.. கண்ட அதிர்ச்சி காட்சி.. அடுத்தடுத்த விபரீதம்.!
இதை பார்த்த நெட்டிசன்கள், "தான் ஏமாற்றப்பட்ட பின்னும் அவர் இப்படி சிரித்துக் கொண்டு வேடிக்கையாக பேசுவது அவரது வெகுளித்தனத்தை காட்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு நபரை ஏமாற்ற எப்படித் தான் மனசு வருகிறதுதோ.?" என்று சமூக வலைத்தளங்களில் தற்போது கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெருக்கமாக இருந்தது குத்தமா.? கணவன், மனைவிக்கு இளைஞர்களால் வந்த சோதனை.! சிவகங்கையில் அதிர்ச்சி.!