நெருக்கமாக இருந்தது குத்தமா.? கணவன், மனைவிக்கு இளைஞர்களால் வந்த சோதனை.! சிவகங்கையில் அதிர்ச்சி.!



husband and wife torched by youngsters in sivakasi karaikudi

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் வாடகை வீட்டில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இருவரும் தங்கள் வீட்டில் தனிமையில் நெருக்கமாக இருந்தனர். இதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் செல்போனில் ஜன்னல் வழியாக வீடியோவாக பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பாக அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு ஒரு நபர் சென்று, "நான் ஒரு இன்ஸ்பெக்டர் உங்கள் மீது தொடர்ந்து புகார் வருகிறது. விசாரணைக்கு வாருங்கள்." என்று கூறி தனது காரில் அழைத்துக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். 

அதன் பின் அந்த பெண்ணிடம் தன்னிடம் உள்ள வீடியோவை காட்டி, "இது நீங்கள் தானே? என்று கேட்டுள்ளார். வீடியோவை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதை எப்படி எடுத்தீர்கள்.?" என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: "காசு தரலன்னா, போட்டோ ரிலீஸ்.." இன்ஸ்டா நட்பால் இளம் பெண்ணுக்கு வந்த வினை.!! தந்தை, மகன் கைது.!!

Husband

அதற்கு பதில் அளிக்காத அந்த நபர், "இந்த வீடியோவை யாருக்கும் அனுப்பக்கூடாது எனில் 3 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்." என்று மிரட்டி அவர் அணிந்திருந்த செயினை கேட்டு இருக்கிறார். 

உடனே அந்த பெண் அது கவரிங் என்று தெரிவிக்க, அதன்பின், "நாளை 20 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு உன் கணவரிடம் கூறாமல் உல்லாசமாக இருக்க நான் சொல்லும் இடத்திற்கு வரவேண்டும், இல்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன்." என்று கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து மிகுந்த அதிர்ச்சியுடனும், கவலையுடனும் தன் வீட்டிற்கு சென்ற அந்தப் பெண் தன் கணவரிடம் இது பற்றி தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் ஹரிஹரசுதன் (28 வயது), முத்து பாண்டி (24 வயது), கோகுல் சந்தோஷ் (21 வயது) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஹரிஹர சுதன் ஒரு சித்தா மருத்துவர் என்பதை தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் தலைமுறைவாக இருக்கும் நிலையில் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அட கொடுமையே... பணத்திற்காக சிறுமி கொலை.!! 15 வயது சிறுவன் வெறி செயல்.!!