#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
ஓரினசேர்கைக்கு உடன்படாத காரணத்தால் இளைஞர் அடித்துக்கொலை; 4 பேர் கொண்ட சிறார் கும்பல் வெறிச்செயல்.! விருதுநகரில் அதிர்ச்சி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, மலைப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 32). இவர் பஞ்சாலை தொழிலாளி ஆவார். சம்பவத்தன்று மல்லம்பட்டி கண்மாய் பகுதியில் சடலமாக கிடந்தார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து நடத்திய சோதனையில், முத்துராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், முத்துராஜை கொலை செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன், 18 வயது கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர், 19 வயது இளைஞர் என நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், அதிர்ச்சிதரும் தகவல் தெரியவந்தது.
அதாவது, இளைஞர்கள் நால்வரும் முத்துராஜை ஓரினசேர்கைக்கு அழைத்து இருக்கின்றனர். இதற்கு முத்துராஜ் இணங்காத காரணத்தால், அவரை வற்புறுத்தி இருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளது என்பது உறுதியானது.