13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் ஆணவக்கொலை; பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்.!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திரா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, இவரது மகன் கார்த்திக் (26). சிவகாசியில் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தபோது, பொன்னையா மகள் நந்தினியை (22) காதலித்து இருக்கிறார்.
ஆத்திரத்தில் பெண்ணின் சகோதரர்
உயிருக்கு உயிராக காதலித்து வந்த இருவரும், கடந்த 8 மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டு சிவகாசியில் வாழ்ந்து வருகின்றனர். திருமணத்தில் பெண் தரப்பு பின்னாட்களில் மகளின் மகிழ்ச்சி கண்டு மனஆறுதல் அடைந்தாலும், பெண்ணின் சகோதரருக்கு மனஅமைதி கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: மருமகள் மீது நடத்தை சந்தேகம்; 1 வயது பேத்தியின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டு கொன்ற தாய்க்கிழவி..!
3 பேர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீச்சு
நேற்று இரவு மாமியார் வீட்டில் இருக்கும் மனைவி நந்தினியை அழைக்க வந்த கார்த்திக்கை, நந்தினியின் சகோதரர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடுரமாக வெட்டிப்படுகொலை செய்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான பாலமுருகன் மற்றும் அவரின் தனபால், சிவா ஆகியோரை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் அமைச்சர் வீட்டருகே பயங்கரம்.! நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி கொடூர கொலை!!