செல்போனை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த சொன்னதால் விரக்தி.. 2 கல்லூரி மாணவிகள் தற்கொலை.!

செல்போனை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த சொன்னதால் விரக்தி.. 2 கல்லூரி மாணவிகள் தற்கொலை.!


Virudhunagar District 2 College Woman Students Suicide Parents Advice Avoid Mobile Concentrate Study

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், பெருமாள்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரின் மகள் சுகந்தி (வயது 18). சுகந்தி அங்குள்ள கல்லூரியில் பயின்று வரும் நிலையில், எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருந்து வந்துள்ளார். 

இதனைகவனித்த சுகந்தியின் தாயார் மக்களிடம் படிப்பில் கவனம் செலுத்தக்கூறி கண்டிக்கவே, மனவேதனையடைந்த சுகந்தி விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார். மயக்க நிலையில் இருந்த சுகந்தியை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்ட சுகந்தி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சாத்தூர் காவல் துறையினர், சுகந்தியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Virudhunagar

இதனைப்போல, ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மாடசாமி. இவரின் மகள் சந்தனமாரி (வயது 19). இவர் சிவகாசி அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். எந்த நேரமும் செல்போனை பார்த்தவாறு நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். 

இதனால் மகளை பெற்றோர் கண்டிக்கவே, மனவேதனடையடைந்த சந்தனமாரி தீடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். பதறிப்போன பெற்றோர்கள் மகளை தேடி அலைந்த நிலையில், அவர் பரமன் எனபவருக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். 

இதனையடுத்து, இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சந்தானலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.