பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து மோதி 3 வயது சிறுவன் பரிதாப பலி: மூவர் படுகாயம்.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, பாலவநத்தம் கிராமத்தை சேர்த்தவர் மீரான் பீவி (வயது 70).
இன்று தனது 3 வயதுடைய பேரன் தானிஸ் என்பவருடன், உறவினர்களோடு அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து உறவினரின் வீட்டிற்கு செல்ல சாலையோரம் சென்றுள்ளார். அச்சமயம் அங்கு வந்த தனியார் மினி பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவுக்கு காத்திருந்தவர் மீது மோதியது.
இந்த விபத்தில் 3 வயது சிறுவன் தானிஸ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மீரான் பீவி, லட்சுமி பிரியா (வயது 37), கருப்பசாமி (வயது 60) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.