"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
சிறுவன் இயக்கிய குடிநீர் வாகனத்தால் விபரீதம்... 2 வயது குழந்தை பரிதாப பலி..!
சிறுவன் இயக்கிய குடிநீர் வாகனத்தால் விபரீதம்... 2 வயது குழந்தை பரிதாப பலி..!

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவன் குடிநீர் வாகனம் ஓட்டியதில், இரண்டு வயது குழந்தை பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே மேட்டமலை பகுதியில் வசித்து வருபவர்கள் முத்துக்குமரவேல்-இந்திரா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில், சோலைராஜ் தெருவில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, பின்னோக்கி இயக்கப்பட்ட ஒரு குடிநீர் வாகனம் குழந்தையை கவனிக்காமல் வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து குழந்தை உயிரிழந்துள்ளது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடத்திய நிலையில், குடிநீர் வாகனத்தை ஓட்டியவர் வீரபாண்டிய புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவரிடம் எந்த விதமான ஓட்டுநர் உரிமமும் இல்லை என்றும் தெரியவந்தது.
இதன் காரணமாக சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.