நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு... அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை.!

நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு... அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை.!


vilupuram-women-court-entenced-life-for-two-admk-member

விழுப்புரம் அருகே சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவை சார்ந்த நிர்வாகிகளுக்கு இன்று ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பு அளித்திருக்கிறது விழுப்புரம் நீதிமன்றம்.

விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை என்ற கிராமத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட  முன் விரோதத்தில்  பெரிய கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் சிறு மதுரையைச் சார்ந்த 15 வயதான ஜெயஸ்ரீ என்ற சிறுபியை கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.

tamilnadu

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளான  முருகன் மற்றும் யாசகம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு  விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்து இருக்கிறதே விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.

 

சாட்சிகள் மற்றும்  விசாரணையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் மற்றும் யாசகம் ஆகியோரின் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.