சாலையோர பள்ளத்தில் கரப்பான் பூச்சி போல தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து; 30 பயணிகள் படுகாயம்.!

சாலையோர பள்ளத்தில் கரப்பான் பூச்சி போல தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து; 30 பயணிகள் படுகாயம்.!


Viluppuram Tindivanam Govt Bus Accident 30 Injured

திண்டிவனம் நோக்கி பயணம் செய்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து நெடிமொழியனுருக்கு அரசு சார்பாக போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. இன்று நெடிமொழியனூர் சென்ற பேருந்து பின்னர் மீண்டும் திண்டிவனம் நோக்கி பயணம் செய்தது. 

இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது பேருந்து ஆலகிராமம் என்ற இடத்தில் வந்த போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் சரிந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

Viluppuram

இவ்விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறி துடித்த நிலையில், அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.