Viral Video: VSOP பிராந்தியில் செத்து மிதந்த பூச்சி.. புதிதாக திறந்த டாஸ்மாக்கில் விநியோகம்.. குடிமகனுக்கு பேரதிர்ச்சி.!
விழுப்புரத்தில் உள்ள சித்தேரி பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய குடிமகனுக்கு பேரதிர்ச்சியாக அதில் பூச்சி ஒன்று செத்து மிதந்தது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன குடிமகன் அதனை விடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, மேற்படி கடைக்காரரிடம் சென்று மாற்று மதுபானத்தையும் வாங்கிக்கொண்டார்.
தனது மனநிலை குறித்து அவர் பேசுகையில், "நான் குடிகாரன் தான், VSOP பிராந்தி குவாட்டர் குடிக்கத்தான் சரக்கு வாங்கிட்டு வந்தேன். சரக்கை நான் பார்க்காமல் அவசரத்தில் குடித்திருந்தால் என்ன ஆவது?. எனக்கு யார் பதில் சொல்வார்?. புதிதாக திறந்த கடையிலேயே இப்படி விற்பனை செய்கிறார்கள்" என புலம்பி இருக்கிறார்.