சொந்த மகளை நண்பருடன் சேர்ந்து சீரழித்து, 8 மாத கர்ப்பிணியாக்கிய தந்தை.. தமிழகமே பேரதிர்ச்சி..!
தந்தையின் பராமரிப்பில் இருந்த சிறுமியை, சொந்த தந்தையே தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது.
விழுப்புரம் நகரில் வசித்து வந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை பயின்றுவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சிறுமியின் தாயார் இறந்துவிட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் அவர் இருக்கிறார்.
இந்த நிலையில், சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி தெரிவித்த பதில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் தந்தையான கோவிந்தன் (வயது 44), அவரின் நண்பர் வி. சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது 48) ஆகியோர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் நண்பரை கைது செய்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.