சூடான பால் கொட்டியதில் 3 வயது குழந்தை துடிதுடித்து பரிதாப பலி..! பெற்றோர்களே கவனம்..!!



Viluppuram Baby Died Hot Milk Slipped

பச்சிளம் குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் கவனமாக இருங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேலச்சேரி கிராமத்தைச் சார்ந்தவர் மணிகண்டன். இவர் ஒரு விவசாயி. இவருக்கு 3 வயதுடைய கிஷோர் என்ற மகன் இருக்கிறார். மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தொரப்பாடி கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு சம்பவத்தன்று சென்றுள்ளார். 

அப்போது சமையலறையில் கொதிக்க வைத்த பாலை குடும்பத்தினர் அலமாரியில் வைத்துள்ளனர். இதனை அறியாத கிஷோர் பாத்திரத்தை எடுக்க முற்படும்போது பால் பாத்திரத்தின் மீது அது தவறுதலாகப்பட்டு சூடான பால் குழந்தையின் மீது கொட்டியுள்ளது.

Viluppuram

இதனால் வலி தாங்காமல் அலறிதுடித்த குழந்தையை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.