புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிறந்தநாளில் விக்ரமன் செய்த மிகபெரிய காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பலவிதமான விமர்சனங்களை பெற்று வெளியேறுவார்கள். அப்படி போட்டியாளர்களும் ஒருவராக களமிறங்கியவர் தான் விக்ரமன்.
இவர் செய்தி தொலைக்காட்சியில் நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர், விசிக கட்சியில் தன்னை இணைத்து கொண்டு திருமாவளவனை தலைவனாக பின்பற்றி வந்துள்ளார்.
சமீபத்தில் கூட இவர் மீது காதல் மோசடி செய்துள்ளார் என்று வழக்கறிஞர் பெண் ஒருவர் இவர் மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு விக்ரமனும் மறுப்பு கூறி பதில் அளித்திருந்தார்.
தற்போது, விக்ரமனின் பிறந்தநாளான இன்று, அவரது உடல் உறுப்புக்கள் அனைத்தும் தனமாக வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று முழு உடல் உறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்து என்னுடைய கொடையாளர் அட்டையை பெற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனால் விக்ரமனின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் பலர் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் விக்ரமனின் இந்த செயலை அனைவரும் பாராட்டி தான் ஆக வேண்டும்.
சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று முழு உடல் உறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்து என்னுடைய கொடையாளர் அட்டையை பெற்றுக்கொண்டேன். pic.twitter.com/t6r2xwNuoi
— Vikraman R (@RVikraman) August 24, 2023