கொரோனாவை தடுக்க தீயாய் வேலைசெய்யும் சுகாதாரத்துறை! தனது குடும்பத்துடன் சேர்ந்து நன்றி தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!



vijayabaskar claps with family for health department


சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டி தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.

அதேபோல் தமிழக மக்கள் இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டி கொரோனாவை தடுப்பதற்கு போராடும் மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியார்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்தநிலையில் கொரோனாவை தடுக்க அயராது உழைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அவரது குடும்பத்துடன் சேர்ந்து கொரோனாவை தடுப்பதற்கு போராடும் மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியார்களுக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.