மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
#Breaking: வேங்கைவயல் விவகாரம்; 2 விசிகவினர் கைது.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி இருக்கிறது. இந்த தொட்டியில் கடந்த 26 டிசம்பர் 2022 அன்று மலம் கலக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான புகார் எழுந்து விசிக கட்சி, இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பல தரப்பு, ஆதிக்க ஜாதிவெறி எண்ணம் கொண்டவர்கள், குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறினர். போராட்டமும் நடத்தினர்.
பட்டியலின இளைஞர்கள் 3 பேர் கைது
இதனிடையே, இந்த விஷயம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்த நிலையில், சமீபத்தில் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி வழக்கு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. அதன்படி, குற்றவாளிகளாக அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்ளூரை சேர்ந்த கவுன்சிலரின் கணவரை பழிவாங்க, ஜாதி சண்டையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான இழி செயலை கையில் எடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பட்டியலின இளைஞர்களான ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, இளைஞர்கள் முத்துகிருஷ்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: சரக்கடிக்க கொட்டகை போட்ட விசிக பிரமுகர்; எதிர்ப்பு தெரிவித்தவர் மீது பாய்ந்து-பாய்ந்து தாக்குதல்.. 6 பேர் கும்பல் கைது.!
மக்கள் போராட்டம்
இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிறுத்தை சிவா உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டியலின மக்கள் வேங்கைவயல் கிராமத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்ட எங்களின் கிராம இளைஞர்களையே, குற்றவாளிகள் என 3 பேரை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. எங்களுக்கு நியாயம் வேண்டும். சிபிசிஐடி விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுகொள்ள கூடாது.
விசிகவினர் கைது
சிபிஐ விசாரணை கட்டாயம் வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், போராட்டக்குழுவினரை சந்திக்கச் சென்ற விசிக நிர்வாகிகள் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேங்கைவயல் கிராமத்திற்குள் செல்லும் பாதையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு & பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வேங்கைவயலில் நடந்தது என்ன? திட்டமிட்டு பரப்பப்பட்ட வன்மம்.. ஆயுதப்படை காவலரின் இழிச்செயல்.!