தமிழகம் சமூகம்

"நான் ஜாதி மதம் அற்றவர்" அரசு சான்றிதழை வாங்கியுள்ள பெண்மணி; குவியும் பாராட்டுகள்.!

Summary:

velour - thiruppaththur - sneka - non religion caste certificate

இந்தியாவிலேயே முதல்முறையாக நான் ஜாதி மதம் மற்றவர் என்ற அரசு சான்றிதழை வாங்கியுள்ள பெண்மணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள பல பிரச்சனைகளில் முக்கியமான ஒரு பிரச்சனை என்னவென்றால் ஜாதி மதம் தான் என்றாள் மிகையாகாது. ஏனென்றால் ஒரு குழந்தை பள்ளி சேர்வதில் இருந்தே இந்த பிரச்சனை தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த பார்த்திப ராஜா என்பவருடைய மனைவி சினேகா(21) நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அரசு சான்றிதழை திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி என்பவரிடமிருந்து பெற்றுள்ளார்.

இது குறித்து சினேகா கூறுகையில், ‘என்னை பள்ளியில் சேர்க்கும் போதே என்னுடைய பெற்றோர்கள் எனக்கு எந்த ஜாதியும் இல்லை என்று சொல்லியே சேர்த்தார்கள். முதலில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பள்ளி நிர்வாகம், தொடர் போராட்டத்துக்கு பின் சேர்த்துக் கொண்டார்கள். இதையடுத்து கல்லூரி வரையில் சாதி இல்லாமலே படித்தேன். 

எங்கள் குடும்பத்தின் மீது எந்த விதமான ஜாதி, மதச்சாயம் விழுந்த விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதற்காகவே என்னுடைய உடன்பிறப்புகளுக்கு மும்தாஜ், ஜெனிஃபர் என்று பெயர் சூட்டப்பட்டது. என்னுடைய கணவர் பார்த்திப ராஜாவுக்கும் ஜாதி, மத அடையாளங்கள் எதுவும் கிடையாது. எனவே, ஜாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தேன். தற்போது பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளது’. என்று கூறினார்.

இதனால் தற்போது இந்தியாவிலேயே சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமை சினேகாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement