இறந்தும் உயிர்வாழும் பெண்மணி; மூளைச்சாவடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புக்கள் தானம்.!Vellore Gudiyatham women Brain Death Organ Donation 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், எழில் நகரில் வசித்து வருபவர் சசிகுமார். இவரின் மனைவி சத்யா. தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். மகன் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வரும் நிலையில், மகள் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, எதிர்கால படிப்புக்காக காத்திருக்கிறார். 

உடல் உறுப்புக்கள் தானம்

இந்நிலையில், 41 வயதான சத்யாவுக்கு அவ்வப்போது தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 17ம் தேதி அங்குள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

இதையும் படிங்க: வேலூர் மாவட்டத்தை குளிர்வித்த ஆலங்கட்டி மழை; மகிழ்ச்சியில் பொதுமக்கள்..! 

இந்நிலையில், நேற்று காலை சத்யா மூளைச்சாவடைந்தார். இந்த விஷயத்தை அறிந்த குடும்பத்தினர் பெரும் கவலைக்கு உள்ளாகினர். மேலும், அவரின் உடல் உறுப்பு தானமாக வழங்க குடும்பத்தினர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, குடும்பத்தினர் ஒப்புதலுடன் சத்யாவின் இதயம், கல்லீரல், கிட்னி, கண்கள் தனமாக பெறப்பட்டன. 

உடலுறுப்பு தானம் செய்த சத்யாவின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் அஞ்சலி செலுத்தியது. 
 

இதையும் படிங்க: தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை; சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!