தமிழகம்

வாடகைக்கு வீடு கிடைக்காததால் சோகம்., பெண் எடுத்த விபரீத முடிவால் கண்ணீரில் கணவன்.!

Summary:

வாடகைக்கு வீடு கிடைக்காததால் சோகம்., பெண் எடுத்த விபரீத முடிவால் கண்ணீரில் கணவன்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், நெல்லூர்பேட்டை என்.எஸ்.கே நகர் சன்னதித்தோப்பு இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பௌனம்மாள் (வயது 60). தம்பதிகளுக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில், அவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். 

தம்பதிகள் இருவரும் குடியிருந்து வந்த வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், இதனை அதிகாரிகள் விரைவில் இடிக்க இருப்பதாகவும் தெரியவருகிறது. இதனால் குடியிருக்க வாடகைக்கு வீடு தேடி அலைந்த நிலையில், தம்பதிகள் பல இடங்களில் வீடு தேடியும் கிடைக்காததால் பௌனம்மாள் விரக்தியில் இருந்துள்ளார். 

நேற்று முன்தினம் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பௌனம்மாள், தெருவில் நின்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துகொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து, சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement